Wednesday, 25 September 2013

யோகா




பத்மாசன நிலையில் யோக தியானம் புரியும் சிவனின் சிலை. யோகா (சமஸ்கிருதம், பாலி:योग yóga ) என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் ஒப்பற்ற கலை ஆகும். இக்கலை இந்தியாவில் தோன்றி வளர்ந்து வழிவழியாய் வரும் ஓர் ஒழுக்க நெறியாகும்.
இது உடலையும் உள்ளத்தையும் நலத்துடன் வைத்துப் போற்றும் ஒழுக்கங்களைப் பற்றிய நெறி.
இந்தச் சொல் இந்து மதம், புத்த மதம், சமண மதம் ஆகியவற்றில் மனதை நோக்கிய அகப்பயணம் அல்லது தியானம் செய்தல் என்னும் பயிற்சி முறைகளோடு தொடர்புடையது
இந்துமதத்தின் ஒரு சாராரின் கூற்றுப்படி இது இந்து தத்துவத்தின் (ஆறு வைதீகமான) / ஆச்சாரங்கள் நிறைந்த பள்ளிகளில் ஒன்றைக் குறிக்கிறது; அதன் பயிற்சிகளை அதன் குறிக்கோளை நோக்கி இயக்குகிறது.
சமண மதத்தில் இது ஒட்டுமொத்த மனம், வாக்கு, உடல் மூன்றினுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் எனக் குறிக்கிறது.
யோகாவின் முக்கிய கிளைகளாக இந்து மதக் கோட்பாட்டில் அடங்குவது ராஜ யோகம் , கர்மயோகம் , ஞானயோகம் , பக்தியோகம், ஹதயோகம் ஆகிய யோக நெறிகளாகும். பதஞ்சலியின் யோக சூத்திரங்களில் தொகுக்கப்பட்டிருப்பதுதான் ராஜ யோகா மற்றும் இந்து மதக்கோட்பாட்டின் படி எளிமையான யோகாவாக அறியப்பட்டுள்ள இது, சாங்கிய வரலாற்று நெறிவழியின் ஒரு பகுதியாகும். யோக சாத்திரத்தைப் பற்றி கருத்து தெரிவித்துள்ள பிற இந்து நூல்கள், உபநிடதங்கள், பகவத் கீதை, ஹத யோக பிரதிபிகா, சிவ சமிதா மற்றும் பலவாறான தந்திரங்கள்.
யோகா என்ற சமஸ்கிருத சொல்லுக்கு பொருள்கள் பல உள்ளன, மற்றும் இது சமசுக்கிருதத்தின் வேரான யுஜ் -பொருள்- கட்டுப்படுத்துதல், ஒன்று படுத்துதல்/ஒருங்கிணைத்தல் என்ற வார்த்தையில் இருந்து வந்துள்ளது. மொழிபெயர்த்தலில், பொருத்துதல், ஒருங்கிணைத்தல்'இணைந்த,மற்றும்பொருள்கள்ஆகியவை அடங்கும். இந்தியாவிற்கு அப்பால் , யோகா என்ற தனிப்பட்ட சொல் ஹத யோகாவுடன் தொடர்புடைய, அதன் எட்டு அங்கங்களில் ஒன்றான ஆசனங்கள் (அமரும் முறைகள்) அல்லது ஒரு வகை உடற்பயிற்சி என்று மட்டுமே அறியப்படுகிறது .
யோகாவை பயிற்சிசெய்பவர்கள் அல்லது யோகா கோட்பாட்டை பின்பற்றுபவர்கள் யோகி அல்லது யோகினி என்று அழைக்கப்படுகின்றனர்.

No comments:

Post a Comment